.

8% பொருளாதார வளர்ச்சியால் ஏழைகளுக்கு என்ன பயன்? பிரதமரிடம் வினா

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி - ஜிடிபி) இந்த நிதியாண்டில் 8 விழுக்காடு இருக்கிறது என்று கூறுகிறீர்கள், அதனால் ஏழை, சராசரி மக்களுக்கு என்ன பயன் ஏற்பட்டுள்ளது என்று இதழாளர் ஒருவர் எழுப்பிய வினாவிற்கு பதில் சொல்ல சிரமப்பட்டார் பிரதமர் மன்மோகன் சிங்.

நாட்டின் முதன்மை தொலைக்காட்சிகளின் ஆசிரியர்களை இன்று காலை தனது இல்லத்தில் சந்தித்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், அவர்களுடைய வினாக்களுக்கும் விரிவாக விடையளித்தார்.

இந்நிகழ்வில் பங்கேற்ற பெண் இதழாளர் ஒருவர், இந்தியாவின் பொருளாதாரம் இந்த நிதியாண்டிலும் 8 விழுக்காடு வளரும் என்று கூறுகிறீர்கள், ஆனால் உணவுப் பொருள் பணவீக்கமோ கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் பொருளாதார வளர்ச்சியால் ஏழைகளுக்கும் சராசரி மக்களுக்கும் கிடைக்கும் பயன் என்ன? என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த மன்மோகன் சிங், “அவர்களை காப்பதற்கென்றே சமூக பாதுகாப்பு வலயத்தை (Social Safety net) ஏற்படுத்தியுள்ளோம். மகாத்மா காந்தி தேச ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் அவர்களுக்கு ஆண்டிற்கு 100 நாட்கள் வேலை அளிக்கவும், அதற்கு நாளுக்கு ரூ.100 ஊதியம் பெறும் உத்தரவாதத்தையும் அளிக்கிறது. ஆயினும், உணவுப் பணவீக்கம் அவர்களை பெரிதாக பாதிக்கிறது என்பதை ஏற்கிறேன். தங்களுடைய அன்றாட வருவாயில் 60 விழுக்காட்டை அவர்கள் உணவுற்காக செலவு செய்ய வேண்டியதுள்ளது. ஒட்டுமொத்த முன்னேற்றத்தை உறுதி செய்யும்போது அவர்களும் பயன்பொறுவார்கள்” என்று கூறினார்.

No comments:

Post a Comment

இதையும் காணுங்கள்..