ஐ.பி.எல். கிரிக்கெட்டை பி.சி.சி.ஐ. நடவடிக்கைகளிலிருந்து பிரிக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதியில் செய்யப்பட்ட திருத்தத்தை எதிர்த்து ஏ.சி.முத்தையா செய்திருந்த மனு மீதான வழக்கில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரு வேறு தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இந்த புதிய திருத்தம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியச் செயலர் ஸ்ரீனிவாசனின் சொந்த நலன் கருதி உருவாக்கப்பட்டுள்ளது ஏனெனில் அவர் பி.சி.சி.ஐ. செயலாளராகவும் இருக்கிறார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார் என்பதே ஏ.சி. முத்தையாவின் வாதம்.
இந்த மனுவை இருநபர் நீதிபதிக் குழு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. பன்ச்சால் என்ற நீதிபதி ஏ.சி. முத்தையாவின் மனுவை நேரடியாக தள்ளுபடி செய்தார். ஆனல் மற்றொரு நீதிபதியான கியான் சுதா மிஷ்ரா பி.சி.சி.ஐ. அலுவலகத்தில் பதவி வகிப்பவர் ஐ.பி.எல். கிரிக்கெட் அணியின் உரிமையாளராக இருக்க முடியாது என்றார்.
எனவே இந்த வழக்கை மேலும் நீதிபதிகள் அதிகம் அடங்கிய குழு விசாரிக்க தலைமை நீதிபதியிடம் அனுப்பி விட்டனர்.
மேலும் முத்தையாவின் மனுவில், இந்த திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு முன்பாக 21 நாட்கள் தாக்கீது கொடுக்கவேண்டும், ஆனால் ஸ்ரீனிவாசன் அதனைச் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு ஸ்ரீனிவாசனோ முத்தையாவின் நோக்கத்தில்தான் குறைபாடு உள்ளது என்று கூறியுள்ளார்.
2008ஆம் ஆண்டு ஸ்ரீனிவாசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தப் புள்ளிகள் அனுப்பியபோதே தான் இதனை கேள்விக்குட்படுத்தினேன் என்று கூறுகிறார் ஏ.சி. முத்தையா.

No comments:
Post a Comment