.

Showing posts with label சாய்னா நேவால். Show all posts
Showing posts with label சாய்னா நேவால். Show all posts

சாய்னா நேவால் அதிர்ச்சித் தோல்வி

புது டெல்லியில் உள்ள ஸ்ரீ விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் இந்திய ஓபன் சூப்ப்ர் தொடர் பேட்மின்டன் முதல் சுற்றிலேயே இந்திய வீராங்கனை சாய்னா நேவால் அதிர்ச்சித் தோல்வி தழுவி வெளியேறினார்.

3 முறை இதற்கு முன்பு சாய்னாவிடம் மண்ணைக் கவ்விய ஜப்பான் வீராங்கனை அய் கோட்டோ 21- 17, 21- 19 என்ற நேர் செட்களில் சாய்னாவை வீழ்த்தினார்.

மொத்தம் 33 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் முதல் செட்டை சாய்னா 12 நிமிடங்களில் இழந்தார். அதிலும் கோட்டோ 10- 10 என்ற சம நிலையிலிருந்து வெற்றி பெற்றார்.

சாய்னாவின் ஆட்டம் சரியாக அமையவில்லை. ஆடவர் ஒற்றையர் பிரிவில் குரு சாய் தத், தன் முதல் சர்வதேச போட்டியில் விளையாடினாலும் உலகத் தரநிலையில் 6ஆம் நிலையில் உள்ள பூன்சாக் பொன்சானாவை 22- 20, 18- 21, 21- 19 என்ற செட் கணக்கில் வீத்தினார்.

ஒற்றையர் பிரிவில் ஆடவர் ஆட்டங்களில் மற்ற இந்திய வீரர்கள் தோல்வி தழுவ காஷ்யப் மட்டுமே தற்போது மீதமுள்ளார்.

இதையும் காணுங்கள்..