.

சாய்பாபா வாரிசையும் நியமிக்கவில்லை, உயிலையும் எழுதிவைக்கவில்லை

ரூ.2 லட்சம் கோடி சொத்து : சாய்பாபா அறக்கட்டளைக்கு யார் தலைவர்?

புட்டபர்த்தி: சத்ய சாய்பாபா தனக்கு பின் வாரிசாக யாரையும் நியமிக்கவில்லை, மேலும் அறக்கட்டளை தொடர்பாக உயில் எதுவும் எழுதிவைக்கவும் இல்லை என்று சாய் அறக்கட்டளை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.


சாய்பாபா இறந்த பிறகு அறக்கட்டளை சொத்துக்களை உறுப்பினர்கள் கொள்ளையடிப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. சாய் அறக்கட்டளையின் அடுத்த தலைவர் யார் என்று அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் பதில் அளி்க்கும் வகையில் சாய் அறக்கட்டளை உறுப்பினர்கள் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என். பகவதி, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கே. சக்ரவர்த்தி, தொழிலதிபர் வேணு சீனிவாசன், பாபாவின் தம்பி மகன் ஆர்.ஜே. ரத்னாகர், சார்டட் அக்கௌண்டன்ட் நாகானந்த் ஆகியோர் பேசினர்.

பாபாவுக்கு பணிவிடை செய்பவர் தான் சத்யஜித். அவர் ஒன்றும் அறங்காவலரோ, வாரிசோ கிடையாது. பாபா உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை. அறக்கட்டளையின் அடுத்த தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது, அறக்கட்டளை பணிகளை ஒருங்கிணைப்பது குறித்து அடுத்த வாரம் கூடும் அறங்காவலர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

அறக்கட்டளையின் சொத்துக்களை அதன் உறுப்பினர்கள் தங்கள் இஷ்டத்திற்கு பயன்படுத்துவதாக வரும் செய்திகள் உண்மையில்லை. அவை அறப்பணிக்களுக்காக மட்டும் தான் பயன்படுத்தப்படுகின்றன. பாபா இறப்பதற்கு முன்னதாகவே சவப்பெட்டி வாங்கியதாகக் கூறப்படுவதிலும் உண்மையில்லை. அவர் இறந்த பிறகே அது பெங்களூரில் இருந்து வாங்கபப்ட்டது என்றனர்.

பாபா மருத்துவமனையில் இருந்தபோது அவருடைய உறவினர்களைப் பார்க்க அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை அவருடைய தம்பி மகன் ரத்னாகர் வன்மையாக மறுத்தார்.

பாபா மருத்துவமனையில் இருந்த 27 நாள்களும் தான் பாபாவுடன் இருந்ததாகவும், டாக்டர்கள் அனுமதித்த போதெல்லாம் அறக்கட்டளை உறுப்பினர்களும், பாபாவின் உறவினர்களும் வந்து பார்த்துச் சென்றதாகவும் தெரிவித்தார்.

உடல் நலக்குறைவு ஏற்பட்டவுடன் பாபாவே தனக்கு எந்த மருத்துவமனையில், எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். பாபாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த மத்திய, மாநில அரசுத் தலைவர்கள் தங்களுக்கு அறக்கட்டளை விவகாரத்தில் தலையிடும் எண்ணம் இல்லை என்று தெரிவித்ததாக அவர்கள் கூறினார்கள்.

ராணாவா... கானாவா... வடிவேலு ந‌க்க‌ல்

ாணா படம், கானா படமஎதி‌‌லிருந்தநீக்கினாலுமகவலைப்பட‌ப்போவ‌தி‌ல்லை எ‌‌ன்று கூ‌றி‌ய நடிக‌ர் வடிவேலு, ே 13ஆ‌ம் தேதி‌க்கு பிறகஎல்லாமமாறும் எ‌ன்றா‌ர்.

முதலமைச்சரகருணாநிதியை கோபாலபுரத்திலஉள்வீட்டிலஇன்று நடிகை‌க்சுவை நடிக‌ர் வடிவேலு ச‌ந்‌தி‌த்து பே‌சினா‌ர். சுமா‌ர் ஒரு ம‌ணி நேர‌ம் ச‌ந்‌தி‌த்து‌ப் பே‌சினா‌ர். அப்போதமத்திய அமை‌ச்ச‌ர் ு.க.அழகி‌ரி உடனஇருந்தார்.

இ‌ந்த ச‌ந்‌தி‌ப்பு‌க்கு ‌பி‌ன்ன‌‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் பே‌சிய வடிவேலு, ஒரதனியாரதொலைககாட்சி வா‌க்கு‌ப்பதிவுக்கபிறகநடத்திகருத்துககணிப்பிலி.ு.க. கூட்டணி மீண்டுமஆட்சியபிடிக்குமஎன்றஇப்போதகூறி இருக்கிறது. அந்மகிழ்ச்சியபகிர்ந்தகொள்வதற்காமுதலமைச்சர் கருணா‌நி‌தியை சந்தித்தேன். அவருமமகிழ்ச்சி அடைந்தார்.

கிராமப்புமக்களுக்கு 108 ஆம்புலன்ஸ், கலைஞரகாப்பீட்டதிட்டமபோன்பல்வேறநலத்திட்டங்களசென்றசேர்ந்தஇருக்கிறது. நானபிரசாரமசெய்போதமக்களிடமஇருந்எழுச்சியிலஇததெரிந்தது. எனவே, ி.ு.க. கூட்டணி வெற்றி பெறுவதஉறுதி. இதயாருமதடுக்முடியாது எ‌ன்று வடிவேலு கூ‌றினா‌ர்.

பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌‌ள், எத்தனதொகுதிகளிலவெற்றி கிடைக்கும் எ‌ன்று கே‌ள்‌வி‌க்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த வடிவேலு, தொலைக்காட்சி கருத்துக்கணிப்பின்படி, 130 இடங்களிலமட்டுமல்ல, 200க்குமமேற்பட்தொகுதிகளிலி.ு.க. கூட்டணி அமோவெற்றி பெறும் எ‌‌ன்றா‌ர்.

''1971இலி.ு.க. ஆட்சிக்கவராதஎன்றார்கள். ஆனால் 184 இடங்களிலவெற்றி பெற்றி.ு.க. ஆட்சியபிடித்தது. அதபோஇப்போதுமஅதிஇடங்களிலி.ு.க. கூட்டணி வெற்றி பெறும். இந்ஆட்சி மூலமபயனஅடைந்ஏழஎளிமக்களாலமிகபபெரிமகிழ்ச்சி கிடைக்கும்'' எ‌ன்று வடிவேலு கூ‌றினா‌ர்.

விஜயகாந்ததாக்கி பிரசாரமசெய்ததாலராணபடத்திலஇருந்தநீங்களநீக்கப்பட்டதாகூறப்படுகிறதே எ‌ன்று கே‌ள்‌வி‌க்கு, 'ராணா' படம் 'கானா' படமஎதிலஇருந்தநீக்கினாலுமநானகவலைப்படவில்லை. ே 13ஆ‌ம் தேதி மக்களஆதரவயாருக்கஎன்பததெரியும். அதனபிறகஎல்லாமமாறும் எ‌ன்றா‌ர் வடிவேலு.

அ.இ.அ.ி.ு.க.வுடனே.ு.ி.க. கூட்டணி வைத்ததுதானஅதற்கபின்னடைவஎன்றகூறுகின்றீர்களா எ‌ன்ற கே‌ள்‌வி‌க்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த வடிவேலு, பொறுத்தஇருந்தபாருங்கள். கருணா‌நி‌தி‌யிடமதோற்பதற்ககாத்திருப்பவர்களஎத்தனபேரஎன்பதஅப்போததெரியும் எ‌ன்றா‌ர்.

ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையும் டெல்லியின் மெளனமும்

இலங்கை உள்நாட்டுப் போரில் நடந்த போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்முறைகள், மனித உரிமைப் பிரகடனங்கள் மீறல் ஆகியன பற்றி விரிவான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து இந்திய அரசு மெளனம் காத்து வருகிறது.

‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறி, ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க அரசப் படைகள் நடத்திய இனப் படுகொலைப் போருக்கு (இரகசியமாக) ஆயுதம், ராடார் வழங்கியதிலிருந்து, போரை ‘வேகமாமுடிக்க’ ஆலோசனையும் தந்தது மட்டுமின்றி, அந்நாட்டு பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ச கூறியது போல், ஒவ்வொரு நாளும் இந்தியாவின் தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், அயலுறவுச் செயலர் சி்வ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலர் விஜய் சிங் ஆகியோருடன் ஆலோசித்து திட்டமிட்டே போரை நடத்தினோம் என்று கூறும் அளவிற்கு சிறிலங்க அரசிற்கு எல்லா விதத்திலும் உறுதுணையாக நின்றது. அந்தப் போர் தொடர்பாக சிறிலங்க அரசு என்ன கூறியதோ அதனை அப்படியே இந்தியாவின் நாடாளுமன்றத்திலும் கூறி, நியாயப்படுத்திய சோனியா காங்கிரஸ் அரசு, ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து இதுவரை ஒரு வார்த்தையும் சொல்லாததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்று டெல்லி கூறலாம். ஆனால், பான் கி மூனிடம் அளிக்கப்பட்ட அந்த அறிக்கை, டெல்லியின் நண்பனான சிறிலங்க அரசிடன்தான் முதலில் அளிக்கப்பட்டது என்பதையும், அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகளை சிறிலங்க அரசே கசியவிட்டது என்பதை அறிந்த பின்னரும் ‘எங்களுக்கு அது பற்றி எதுவும் தெரியாது’ என்று கூற முடியாத நிலை டெல்லிக்கு.

இருந்தாலும் டெல்லி மெளனம் சாதிப்பதற்கு உண்மைக் காரணம், அது தனது இனப் படுகொலை நண்பனை காப்பாற்ற எந்த உண்மைகளையெல்லாம் மறைத்ததோ அந்த உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது ஐ.நா.நிபுணர் குழு. அதனால்தான் பதில் சொல்ல முடியாமல் மெளனம் காக்கிறது.

மக்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் தஞ்சமடைந்த மக்களின் எண்ணிக்கை 50,000 முதல் 70,000தான் என்று சிறிலங்க அரசு கூறியதை இந்தியாவின் நாடாளுமன்றத்தில் அப்படியே கூறினாரே பிரணாப் முகர்ஜி! அந்த மூன்று வளையங்களிலும் இருந்த மக்களின் எண்ணிக்கை 3,30,000 பேர் என்பதை அன்றைக்கே உலகம் கூறியபோது, “அதுபற்றியெல்லாம் எங்களுக்குத் தெரியாது, சிறிலங்க அரசு கூறியதைக் கூறுகிறேன்” என்றல்லவா பிரணாப் முகர்ஜி கூறினார்!

இன்றைக்கு 3,30,000 பேர் என்பது ஐ.நா.நிபுணர் குழுவால் உறுதி செய்யப்பட்டுள்ளது...

இதையும் காணுங்கள்..