இலங்கை உள்நாட்டுப் போரில் நடந்த போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்முறைகள், மனித உரிமைப் பிரகடனங்கள் மீறல் ஆகியன பற்றி விரிவான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து இந்திய அரசு மெளனம் காத்து வருகிறது.
‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறி, ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க அரசப் படைகள் நடத்திய இனப் படுகொலைப் போருக்கு (இரகசியமாக) ஆயுதம், ராடார் வழங்கியதிலிருந்து, போரை ‘வேகமாக முடிக்க’ ஆலோசனையும் தந்தது மட்டுமின்றி, அந்நாட்டு பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ச கூறியது போல், ஒவ்வொரு நாளும் இந்தியாவின் தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், அயலுறவுச் செயலர் சி்வ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலர் விஜய் சிங் ஆகியோருடன் ஆலோசித்து திட்டமிட்டே போரை நடத்தினோம் என்று கூறும் அளவிற்கு சிறிலங்க அரசிற்கு எல்லா விதத்திலும் உறுதுணையாக நின்றது. அந்தப் போர் தொடர்பாக சிறிலங்க அரசு என்ன கூறியதோ அதனை அப்படியே இந்தியாவின் நாடாளுமன்றத்திலும் கூறி, நியாயப்படுத்திய சோனியா காங்கிரஸ் அரசு, ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து இதுவரை ஒரு வார்த்தையும் சொல்லாததில் ஆச்சரியம் ஏதுமில்லை.
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்று டெல்லி கூறலாம். ஆனால், பான் கி மூனிடம் அளிக்கப்பட்ட அந்த அறிக்கை, டெல்லியின் நண்பனான சிறிலங்க அரசிடன்தான் முதலில் அளிக்கப்பட்டது என்பதையும், அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகளை சிறிலங்க அரசே கசியவிட்டது என்பதை அறிந்த பின்னரும் ‘எங்களுக்கு அது பற்றி எதுவும் தெரியாது’ என்று கூற முடியாத நிலை டெல்லிக்கு.
இருந்தாலும் டெல்லி மெளனம் சாதிப்பதற்கு உண்மைக் காரணம், அது தனது இனப் படுகொலை நண்பனை காப்பாற்ற எந்த உண்மைகளையெல்லாம் மறைத்ததோ அந்த உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது ஐ.நா.நிபுணர் குழு. அதனால்தான் பதில் சொல்ல முடியாமல் மெளனம் காக்கிறது.
மக்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் தஞ்சமடைந்த மக்களின் எண்ணிக்கை 50,000 முதல் 70,000தான் என்று சிறிலங்க அரசு கூறியதை இந்தியாவின் நாடாளுமன்றத்தில் அப்படியே கூறினாரே பிரணாப் முகர்ஜி! அந்த மூன்று வளையங்களிலும் இருந்த மக்களின் எண்ணிக்கை 3,30,000 பேர் என்பதை அன்றைக்கே உலகம் கூறியபோது, “அதுபற்றியெல்லாம் எங்களுக்குத் தெரியாது, சிறிலங்க அரசு கூறியதைக் கூறுகிறேன்” என்றல்லவா பிரணாப் முகர்ஜி கூறினார்!
இன்றைக்கு 3,30,000 பேர் என்பது ஐ.நா.நிபுணர் குழுவால் உறுதி செய்யப்பட்டுள்ளது...

No comments:
Post a Comment