.

உணவுப் பொருட்கள் பணவீக்கம் 8.76% ஆக உயர்வு

பழ வகைகள், புரதச் சத்து தரும் உணவு வகைகள், வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் உயர்ந்ததன் காரணமாக ஏப்ரல் 16ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் 8.76 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

ஏப்ரல் 9ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 8.74 விழுக்காடாக பணவீக்கம் இருந்தது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தொடர்ந்து குறைந்துவந்த உணவுப்பொருட்களுக்கான பணவீக்கம் மீண்டும் உயரத் தொடங்கியிருப்பது அரசுக்கு பெரும் சவாலாகியுள்ளது.

கடந்த ஆண்டு இதே வாரத்தில் நிலவிய விலையுடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் 9 முதல் 16ஆம் தேதிக்கு உட்பட்ட ஒரு வார காலத்தில் மட்டும் பழ வகைகள் விலை 28.43 விழுக்காடும், முட்டை, ஆட்டுக் கறி, மீன் ஆகியவற்றின் விலைகள் 12.14 விழுக்காடும், வெங்காயத்தின் விலை 10.96 விழுக்காடும், பால் விலை 5.10 விழுக்காடும் உயர்ந்துள்ளது என அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

இதையும் காணுங்கள்..