.

அல்-காய்தாவுக்கு ஆள் தேர்வு செய்யும் மசூதிகள் பட்டியல்: விக்கிலீக்ஸ்

அல்-காய்தா பயங்கரவாத அமைப்பினர் தங்களுக்குத் தேவையான பயங்கரவாதிகளைத் தேர்வு செய்யும் மசூதிகள் பட்டியலை அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பென்டகன் கண்டறிந்துள்ளதாக 'விக்கிலீக்ஸ்' இணையதளம் தெரிவித்துள்ளது.

கனடாவின் மான்ட்ரீல் நகரிலிருந்து கராச்சி வரையில் மசூதிகள், இஸ்லாமிய மையங்களில் அல்-காய்தா அமைப்புக்கு ஆள் சேர்க்கும் இடங்களின் பட்டியலை பென்டகன் தயாரித்துள்ளது.

இந்த பட்டியலில் கியூபாவில் உள்ள குவாந்தநாமோ வளைகுடா, மான்ட்ரீலில் உள்ள அல்-சுனா மசூதி, கராச்சியில் உள்ள அபு பகிர் சர்வதேச பல்கலைக் கழகம், யேமனில் உள்ள திமஜ் மையம், வடக்கு லண்டனில் உள்ள பின்ஸ்பரி பூங்கா மசூதி, இத்தாலியின் மிலன் நகரில் உள்ள மசூதி, பிரான்ஸின் லியோன் நகரில் உள்ள லினெக் மையம், காபூலில் உள்ள வாஸிர் அக்பர் கான் மசூதி ஆகியவற்றில் அல்-காய்தா அமைப்புக்கு ஆள் சேர்ப்பு நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

இதையும் காணுங்கள்..