மார்கண்டேய நடிகர் என்று பெயரெடுத்த நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், பிரபல நடிகரான சூர்யாவின் தம்பியுமான கார்த்திக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. வரும் ஜூலை மாதம் இவருக்கு திருமணம் நடைபெற உள்ளது.
பருத்தி வீரன் படத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தவர் நடிகர் கார்த்தி. பையா, நான் மகான் அல்ல, ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை ஆகிய படங்களில் நடித்து வெற்றிப் படங்களாக்கியவர் கார்த்தி.
இவர் சென்னையில் பி.இ. முடித்து விட்டு, அமெரிக்காவில் உள்ள பிங்காம்டன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்., பட்டம் பெற்றிருக்கிறார். என்ஜினியராக இருந்தாலும் கார்த்தியின் ஆர்வமோ நடிப்பில் தான் இருந்தது என்பதை சொல்லவே வேண்டாம். இடையில் நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர்களுடன் காதல் கிசு கிசுவில் சிக்கினார்.
இந்நிலையில் கார்த்திக்கு தீவிர பெண் வேட்டையில் ஈடுபட்ட அவரது நடிகர் சிவக்குமார், ஈரோட்டைச் சேர்ந்த சின்னசாமி - ஜோதி மீனாட்சி தம்பதிகளின் மகளாகிய ரஞ்சனியை, கார்த்திக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.
ரஞ்சனி, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் எம்.ஏ., ஆங்கி இலக்கியத்தில் தங்க மெடல் பெற்றவர். இவர்களது திருமணம் வரும் ஜூலை மாதம் 3 ஆம் தேதி, கோவையில் நடைபெற இருக்கிறது. சென்னையில் வரவேற்பு நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஆனால் இதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
தன்னுடைய வருங்கால மனைவி குறித்து கார்த்தி கூறியதாவது;
“ரஞ்சனியை முதல்முறை பார்த்தபோது ஒரு மணி நேரத்துக்கு மேல் மனம்விட்டு பேசினேன். நான் நடித்த படங்களில் பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் பார்த்து ரசித்ததாக சொன்னார். கிராமத்து கலாசாரமும் நகரத்து நாகரிகமும் கலந்த ஒரு பெண் எனக்கு மனைவியாக வேண்டும் என்பது அப்பா அம்மாவின் ஆசை. அதே மாதிரி ஈரோடு மாவட்ட கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த ரஞ்சனி கிடைத்திருக்கிறார். அவருக்காக ஒரு செல்போனை பரிசாக கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன்’’ என்றார்.

No comments:
Post a Comment