.

உச்சங்களின் உரசல்

அக்கட சூ‌ப்பர் ஸ்டா‌ரின் மகனை தமிழில் அறிமுகப்படுத்தும் விழாவில் உச்சம் கலந்து கொள்ளாததற்கு தேர்தல் பிரச்சனை காரணமில்ல, மாப்பிள்ளை பிரச்சனைதான் காரணம் என்கிறார்கள்.

உச்சத்தின் மணமகன் படத்தை தயா‌ரித்ததோடு அதில் ஒரு சண்டைக்காட்சியிலும் நடித்திருப்பார் அக்கட சூப்பர் ஸ்டார். இதே கதையை இப்போது உச்சத்தின் மாப்பிள்ளை நடிப்பில் ‌ரிமேக் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் படத்தில் அக்கட சூப்பர் ஸ்டா‌ரின் மகன் தந்தையைப் போல் ஒரு சண்டைக் காட்சியில் தோன்றினால் நன்றாக இருக்கும் என கேட்டிருக்கிறார் உச்சம். இதனை அக்கட சூப்பர் ஸ்டார் மறுத்திருக்கிறார்.

தனது மகனை பிரமாண்டமாக அறிமுகப்படுத்த விரும்புவதாகவும், அதனால் அவரது மருமகனின் படத்தில் நடிக்க முடியாது என்றும் தெ‌ரிவித்துள்ளார்.

இதனை மனதில் வைத்தே உச்சம் விழாவை தவிர்த்தாராம்.

No comments:

Post a Comment

இதையும் காணுங்கள்..